VALLALAR

Tags:
மெய்பொருள் பற்றி
மெய்பொருள் பற்றி திருமந்திரப் பாடல்கள்:
நமக்காக நமது முன்னோர்கள் எத்தனையோ ஞான பொக்கிஷங்களை தந்தருளியிருக்கிறார்கள். தமிழ் அறிந்தவர்கள் உண்மையில் மிகவும் பாக்கியசாலிகள். இங்கே இருக்கின்ற அளவு ஞான நூல்கள் வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. இங்கே இருக்கின்ற அளவு ஞான பெருமக்கள் வேறு எங்கும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தாள் ஒரு சமாதியின் மேல்தான் விழ வேண்டி இருக்கிறது. சமாதி என்றால் சம-ஆதி. அதாவது ஆதியான இறைவன் நிலையை அடைந்தவர்கள். செத்தைவனை புதைத்தல் அது சமாதி அல்ல.
இனி சாத்திரத்தில் சிறந்த “திருமந்திரம்” கூறும் சில மெய்ஞான பாடல்களை கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எல்லா ஞானிகளும் இறைவன் உடலில் கண்ணில் காரியப்படுவதை தெளிவுபடுத்தி அடைய வேண்டிய நிலையும் வழிகளையும் கூறிச்சென்றதையும் திருமூலர் தெளிவுபட விளக்குகிறார்.
“விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உணனின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிப்பருத் தானே” – திருமந்திரம் 113
இந்த பாடலில் இறைவன் நம் உடலில் இருக்கும் பான்மையினை தெளிவுபடுத்தியுள்ளார்கள் . இறைவன் ஆகாயத்திலிருந்து இறங்கி நாம் செய்துள்ள பாவ புண்ணிய வினைகளுக்கு தகுந்தவாறு உடல் எடுத்து குளிர்ச்சி பொருந்திய திருவடியை நம் தலைக்கு முன்பக்கத்தில் காட்டி – உள் நின்று உருக்கி ஒப்பில்லாத ஆனந்தத்தை கண்ணிலே காட்டி களிம்பாகிய மும் மலத்தை அறுத்தான். இல்லாமல் செய்கிறான் என்கிறார். இந்த ஒரு பாடல் போதுமே ஒருவன் ஞானம் பெறுவதற்கு!
“பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்
பார்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொரியுமே “ – திருமந்திரம் 2883
பார்ப்பான் - பார்ப்பது கண்தானே . எனவே கண்தான் பார்ப்பான்.
அதில் உள்ள ஒலிதானே நம்மை நடத்திச் செல்கிறது! கண்-பார்ப்பான்-பார்த்தன், ஒளி-நடத்துபவன்-சாரதி.
கண் ஒளியைத்தான் - கண்ணனைத்தான்(கண்) - நாம் பார்த்த சாரதி என்கிறோம். இந்த பார்ப்பன் அகத்திலே
பார்ப்பசு ஐந்துண்டு அதாவது புலன்கள் ஐந்துண்டு என்கிறார். இதை நாம் மேய்க்காவிட்டால் -
கட்டுப்படுத்தாவிட்டால் கண்ட கண்ட இடத்தில் மேய்ந்து விடும். மனதை கட்டுப்படுத்தும் மார்க்கத்தை
அறிந்து நாம் நம் புலன்களை நம் வசப்படுத்தினால் கர்மேந்திரியங்கலான நம் புலன்கள் ஞானந்திரியமாக
மாறி அதனால்
நமக்கு அமுதம் கிடைக்கும் என்று கூறுகிறார்.
- Vallalar's blog
- Login or register to post comments
- Printer friendly version